அந்த மனசு இருக்கே அது தான் சார் கடவுள்...5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு குவியும் வாழ்த்துக்கள்..!
சேவை மனப்பான்மையுடன் மிக, மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருபவர்கள் தூய்மை பணியாளர்கள்.அதிகாலை 4 மணிக்கு துவங்கி, இரவு 10 மணி வரை குடிநீர் விநியோகம், ஊரை தூய்மைப் படுத்துதல், பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எந்தவித பணி பாதுகாப்பும் இல்லாத நிலையில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மிகக்குறைவான ஊதியத்தில் அதாவது ரூ. 3000 துவங்கி 7000 ரூபாய் வரை மட்டும் ஊதியமாக பெற்று வருகின்றனர்.
அப்படிப்பட்ட ஒருவர் இன்று சென்னையில் செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியள்ளது
இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் தான் வீட்டில் வைத்திருந்த வைர நெக்லசை தவறவிட்டார். அதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும். வீட்டிலிருந்த குப்பையுடன் வைர நெக்லஸ் குப்பை தொட்டிக்குள் போய் இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. உடனடியாக அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிந்த அந்தோணிசாமியின் உதவியை நாடிய அவர், அவரது வீட்டின் அருகே இருந்த குப்பை தொட்டிக்குள் தேடி நெக்லசை தேடினார். அதில் வைர நெக்லஸ் இருந்துள்ளது. உடனே குப்பையிலிருந்து வைர நெக்லஸை மீட்ட தூய்மை பணியாளர் அந்தோணிசாமி, அதனை உரிமையாளரிடம் கொடுத்தார்.
நகையை பறிகொடுத்தவரின் வேதனையை புரிந்து கொண்டு அவருக்காக தூய்மை பணியாளர் செய்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
பலர் சமூக வலைத்தளத்தில் ஒரு வைரம் இன்னொரு வைரத்தை கண்டுபிடித்த தருணம் என பதிவிட்டு வருகின்றனர்