அடேங்கப்பா... 2 நாட்களில் டாஸ்மாக்கில் இத்தனை கோடி வசூலா ?
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் விற்பனையாகும் மதுபானங்களின் சாதனை ஒவ்வொரு ஆண்டு முறியடிக்கப்படுவது வழக்கம்.
2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.431.03 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில், 2022 ஆம் ஆண்டு ரூ. 464.21 கோடியாக அதிகரித்தது. இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.467 கோடி மது விற்பனை நடைபெற்றுள்ளது.
கடந்த 11ஆம் தேதி ரூ.220 கோடிக்கும், நேற்று ரூ.247 கோடிக்கும் மதுபானம் விற்கப்பட்டுள்ளது.வழக்கமாக ஒருநாளைக்கு ரூ.150 கோடி அளவில் தான் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையாகும் என்ற நிலையில், தீபாவளியை முன்னிட்டு சுமார் 50 சதவீதத்திற்கும் மேலாக விற்பனை அதிகரித்துள்ளது.
தீபாவளியான நேற்று சென்னையில் ரூ.52.98 கோடி, மதுரையில் ரூ.51.97 கோடி, திருச்சியில் ரூ.55 கோடி, சேலத்தில் ரூ.46.62 கோடி, கோவையில் ரூ.39.61 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.