1. Home
  2. தமிழ்நாடு

அடேங்கப்பா..! இவ்வளவு கட்டணமா ? தீபாவளிக்கு ஊருக்கு போக கடன் வாங்கிட்டு தான் போக முடியும் போல : வானதி சீனிவாசன்..!

1

பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்து கட்டணம் 30% வரை குறைக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் சில தினங்களுக்கு முன் அறிவித்ததை நான் செய்தித்தாள் மூலம் அறிந்தேன்..  ஆனால் நடப்பதோ வேறு... சென்னையிலிருந்து  மதுரை செல்ல கட்டணம் ரூ.3000 - 3400, நெல்லைக்கான கட்டணம் ரூ.3200 - 3500,  கோவைக்கான கட்டணம்  ரூ.3500 - 4000 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் பேருந்துக்காக கடன் வாங்கிக் கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சொல்வது ஒன்று... செய்வது ஒன்று என மீண்டும் நிரூபித்துள்ளது திமுக அரசு..” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like