1. Home
  2. தமிழ்நாடு

அப்படியே காப்பி அடிச்சு இருக்காங்கப்பா..! புஷ்பா பட பாடலை ஹாலிவுட்டில் காப்பி..!

Q

தேவி ஸ்ரீ பிரசாத்தை, ரசிகர்கள் DSP என்று அழைப்பதுண்டு. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர், தனது 25 வருட திரை வாழ்க்கையில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்காக வேலை பார்த்திருக்கிறார். 

சமீபத்தில் குபேரா திரைப்படட்திற்கும் இவர்தான் இசையமைத்திருந்தார். 

தேவி ஸ்ரீ பிரசாத், ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பதாக கூட சில ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டது. ஆனால், அந்த முயற்சி பேச்சு வார்த்தையுடன் கைவிடப்பட்டது. 

தேவி ஸ்ரீபிரசாத் இசையில், 2021-ம் ஆண்டு வெளியான படம் 'புஷ்பா'. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடித்திருந்தனர். 

பான் இந்திய அளவில் வெளியான இந்த திரைப்படம், பெரிய ஹிட் அடித்து, மாபெறும் வசூலை பெற்றது. இந்த படத்தை பலர் தெரிந்து கொண்டது, இதில் இடம் பெற்றிருந்த “ஊ அண்டாவா..” பாடல்தான். படத்திற்கும் பாடலுக்கும் இசையமைத்திருந்தது, தேவி ஸ்ரீ பிரசாத்தான்.

இந்த பாடலை, ஹாலிவுட்டில் காப்பி அடித்திருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து சமீபத்தில் பேசியிருக்கும் அவர், ரசிகர்கள் இந்த பாடலை ரசித்து கேட்பதாகவும், தான் இந்த பாடலை 5 நிமிடத்தில் உருவாக்கியதாகவும் கூறியிருந்தார். உலகம் முழுவதும் கேட்கப்படும் இந்த பாடலை, ஒரு ஆங்கில பாடகர் தன் அனுமதியின்றி காப்பி அடித்து விட்டதாக கூறியிருக்கிறார். இவர், இது குறித்து புகார் கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எந்த மொழி பாடல்?

தேவி ஸ்ரீ பிரசாத், தன் பாடல் காப்பி அடிக்கப்பட்டதாக கூறினாரே அன்றி, யார் அதற்கு காரணம் என்றெல்லாம் எதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனால், ரசிகர்கள் சிலர் துருக்கிய மொழியை சேர்ந்த பாடலான அன்லயானா என்ற ஒரு பாடலை வைத்து இவர் பேசியிருக்க கூடும் என்று கூரி வருகின்றனர். இதற்கு அதியே என்பவர் இசையமைத்திருக்கிறார்.

இந்த பாடலை கேட்கும் ரசிகர்கள், இது அப்படியே ஊ அண்டாவா போல இருப்பதாக யூடியூபில் இருக்கும் அந்த பாடலுக்கு கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like