1. Home
  2. தமிழ்நாடு

"அந்த மனசு தான் சார் கடவுள்"... அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய சக்தி மசாலா நிறுவனர்..!

1

மசாலா பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமான 'சக்தி மசாலா' நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி- டாக்டர் சாந்தி துரைசாமி. ஈரோட்டில் உள்ள இந்த சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.நீயா நானாவில்  +2 பொது தேர்வில் ஏழை மாணவர்கள் சாதனை படைத்தவர்கள் பங்கேற்றனர். அதில் பலர் தங்கள் பெற்றோர்கள் கூலி வேலை செய்து மிகவும் கஷ்டப்பட்டு அவர்கள் பிள்ளைகளை படிக்கச் வைத்ததாக சொன்னார்கள் . சிலர் பெற்றோர்களுடன் கூலி வேலைக்கு சென்று உதவி செய்து அதே நேரத்தில் படிக்கவும் செய்துள்ளனர்.  

அதிலும் ஒரு மாணவரின் தந்தை பொது தேர்வு எழுதும் நேரத்தில் உயிர் இழந்துள்ளார். தந்தையின் மறைவையும் சோகத்தையும் மனதிற்குள் வைத்து கொண்டு பரீட்சை எழுதி சாதித்துள்ளான்.   

இதை எல்லாம் சிறப்பு விருந்தினராக பார்த்து கொண்டிருந்த சக்தி மசாலா நிறுவனர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் லேப்டாப் இலவசமாக கொடுத்தனர். அதை வாங்கிய மாணவர்கள் கண்கலங்கிய தருணம் பார்த்த அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் 2 மாணவிகளுக்கு அவர்கள் விரும்பிய நர்சிங் படிப்பை பிரபல கல்லூரியில் வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்தனர். 


   

Trending News

Latest News

You May Like