அந்த மனசு தான் சார் கடவுள்.. வேலை செய்யும் ஆசிரியருக்கு வீடு கட்டி கொடுத்த பள்ளியின் உரிமையாளர்..!

காஞ்சிபுரம் அடுத்த ஒரிக்கை பகுதி தனியார் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் சரவணன்.
25 ஆண்டுகளுக்கு மேலாக இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12 வரை வகுப்பு எடுக்கிறார். பள்ளியின் தாளாளர் அருண்குமார் சரவணனின் 25 ஆண்டு கால பணியை பாராட்டி நினைவு பரிசு வழங்க முடிவு செய்தார். காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் ஆசிரியர் சரவணனுக்கு 60 லட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டிக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இன்று கிரகப்பிரவேசம் செய்து வீட்டின் சாவியை சரவணனிடம் வழங்கி கௌரவித்தார்.
"நம்ம கூட இருக்குறவங்கள நாம பார்த்துகிட்டா.. நமக்கு மேல இருக்குறவன் நம்மள பார்த்துப்பான்".. பள்ளியில் வேலை செய்யும்...
Posted by Polimer News on Monday 12 May 2025