1. Home
  2. தமிழ்நாடு

அந்த மனசு தான் சார் கடவுள்..! சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்ற தலைமையாசிரியர்..!

Q

துாத்துக்குடி அருகே புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் நெல்சன் பொன்ராஜ், 56; பண்டாரம்பட்டி அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். வகுப்பில் பாடம் நடத்திய போது, விமானம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது, மாணவ - மாணவியர் சிலர், 'விமானத்தில் பயணம் செய்ய எங்களாலும் முடியுமா?' என, கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனால், தன் சொந்த செலவில், ஐந்தாம் வகுப்பு மாணவர் ஐந்து பேர், மாணவியர் ஐந்து பேர், முன்னாள் மாணவர்கள் ஏழு பேர், பெற்றோர் இருவர் என மொத்தம், 19 பேரை, நெல்சன் பொன்ராஜ், நேற்று துாத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.

நெல்சன் பொன்ராஜ் கூறியதாவது: எங்களால் ரயில், விமானத்தில் செல்ல முடியுமா என, மாணவர்கள் கேள்வி எழுப்பினர். வறுமையைக் காரணம் காட்டி அவர்கள் கேட்டது எனக்கு மிகவும் வலித்தது. அதனால் தான் இந்த பயணம். விமானத்தில் சென்னை சென்று, மெட்ரோ ரயிலில் பயணித்தோம். வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு சென்றோம்.

எனக்கு, 1 லட்சத்து, 5,000 ரூபாய் செலவானது. என் சொந்த பணத்தில் இந்த பயணத்தை ஏற்பாடு செய்ததில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like