அந்த மனசு தான் சார் கடவுள்..! சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்றிய பாலா..! பாழடைந்த வீட்டிலிருந்த சிறுமிக்கு புது வீடு..!

கலக்கப் போவது யாரு பாலா மற்றொரு நெகிழ வைக்கும் உதவியை செய்துள்ளார். அதாவது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முதுகு தண்டுவடத்தில் பிரச்சனை ஏற்பட்ட ஒரு சிறுமியை நேரில் சென்று சந்தித்து உதவி செய்திருந்தார். அப்போது அந்த சிறுமி ஒரு பாழடைந்த வீட்டில் இருந்ததால் விரைவில் புது வீடு கட்டி தருவதாக பாலா உறுதி அளித்திருந்தார். அதன்படி இரண்டு மாதங்களில் அந்த சிறுமிக்கு ஒரு புது வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரண்டு மாசத்துக்கு முன்னாடி இந்த பாப்பவுக்கு முதுகு தண்டுல பிரச்சனைன்னு சொன்னதாக பார்க்க வந்திருந்தோம். ஆனால் அவருக்கு அந்த பிரச்சனையோடு வீடும் பிரச்சனையாக இருந்துச்சு. அதனால வீடு கட்டிதாங்கன்னு கேட்டிருந்தாங்க. மூணு மாசத்துல கட்டி தரோம்னு சொன்னோம்.
இப்போ இரண்டு மாசத்துல புது வீடு கட்டிக் கொடுத்துட்டோம். பாப்பாவை சொந்த வீட்டுல பார்ப்பது சந்தோஷமா இருக்கு. என்னுடைய பிறந்தநாளில் என் சொந்த காசுல இந்த வீட்டை கட்டி கொடுத்ததை கடமையா பார்க்கல. உரிமையா பார்க்குறேன்” என்றார்.
இதனிடையே பாலா ஹூரோவாக அறிமுகமாகும் படத்தில் டைட்டில் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘காந்தி கண்ணாடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை ஷெரிஃப் என்பவர் இயக்குகிறார். ஜெயகிரண் என்பவர் தயாரிக்கிறார்.