அது என் தனிப்பட்ட விஷயம்.. சூர்யா தேவி, ரவீந்திரனால் மன உளைச்சல்.. வனிதா கண்ணீர் பேட்டி !
நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்ற விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநரை கடந்த மாதம் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் தொடர்பாக சமூக வலைதளம் மூலம் தொடர்ந்து சர்ச்சை கிளம்பி வருகிறது.
அவரது கணவர் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், பீட்டர் பால் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக போலீசில் புகாரளித்திருந்தார். இதையடுத்து பலரும் இத்திருமணம் குறித்து சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து தன் மீது அவதூறு பேசி வீடியோ வெளியிட்டு வருவதாக போரூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்திருந்தார். தற்போது மீண்டும் சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது வனிதா விஜயகுமார் போலீசில் புகாரளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னைப் பற்றி சூர்யா தேவி என்பவர் யூடியூப் சேனலில் ஆபாசமாகவும் தவறாகவும் பொய்யான தகவல்களை பரபரப்பி வருகிறார். என் இமேஜை கொடுக்க பார்க்கிறார். பணம் சம்பாதிக்க இது போல செய்து வருகிறார்.
போரூர் போலீசில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தேன். சூர்யா தேவி மற்றும் படத்தயாரிப்பாளர் ரவீந்திரன் சேர்ந்து இது போல செயலில் ஈடுபட்டு வருகிறார். தயாரிப்பாளர் ரவீந்திரனிடம் பேசினேன். ஆனாலும் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சூர்யாதேவி- ரவீந்திரன் சேர்ந்து தான் அவதூறு பரப்பி வருகின்றனர். என்னுடைய மகன் மனதளவில் பாதிக்கப்படுகிறார். எனக்கு 40 வயது ஆகிறது. இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. சினிமா தொடர்புடையவர்கள் என்னுடைய விஷயத்தில் தலையிடாதீர்கள்.
ஆதரவு இல்லாத பெண்களை குறிவைத்து அந்த 2 பேரும் அவதூறு பரப்புகிறார்கள். சூர்யா தேவி பற்றிய ஆதாரத்தை போலீசில் கொடுத்துள்ளோம். பிக்பாஸ் என்பது ஒரு நிகழ்ச்சி. அதற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை. கலாச்சார சீரழிவு என்ற வார்த்தையை பயன்படுத்த சூர்யா தேவிக்கு அருகதை இல்லை. இந்த விஷயத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று நடிகை வனிதா கண்ணீர் விட்டார்.
நடிகை வனிதாவின் வழக்கறிஞர் ஸ்ரீதர் கூறுகையில், "சூர்யா தேவி அவரது ஆட்கள் வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். சூர்யாதேவி கஞ்சா விற்பனை செய்பவர். கஞ்சா விற்பனையை பாதுகாப்பாக நடத்துவதற்காகவே சூர்யா தேவி இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்.
தனியார் டிவி ஷோவில் பங்கேற்று வருபவருக்கும் தொடர்பு இருக்கிறது. சூர்யா தேவி கஞ்சா விற்பனைக்காக பேசும் ஆடியோக்களை போலீசில் ஒப்படைத்துள்ளோம். காவல்துறை இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 7-ம்தேதி கொடுத்த புகாரில் போரூர் போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்குப்பதிவு செய்து சைபர்கிரைம் பிரிவுக்கு போரூர் போலீசார் ஏன் மாற்றவில்லை. எங்களது உயிருக்கு ஆபத்து இருக்கிறது.
போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். யூடியூப் சேனல் பப்ளிசிட்டிக்காக இது போன்ற செய்வது நியாயமா? காவல்துறை காலம் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
newstm.in