1. Home
  2. தமிழ்நாடு

விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நன்றி…. தென் மாவட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவி வெளியிட்ட வீடியோ!

Q

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற பகுதிகளில் அதிக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் எவ்வாறு தத்தளித்து வந்தனரோ அதேபோன்று இந்த நான்கு மாவட்டங்களிலும் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். தொடர்ந்து பெய்த கனமழையால் பேருந்து நிலையம், ரயில் நிலையம், குடியிருப்பு பகுதிகள் போன்ற இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியில் வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அதே சமயம் பேரிடர் மீட்பு குழு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி போல்டன் புரம் பகுதியில் இருக்கும் அரசு கல்லூரியின் விடுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் தரைதளத்தில் நீர் தேங்கி அங்குள்ள மாணவிகள் வெளியில் வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதே சமயம் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் மற்றொருவரின் உதவியை நாடியுள்ளனர். இத்தகவலை அறிந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் விரைந்து சென்று 25 மாணவிகளுக்கு உணவு போன்ற அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். இதுகுறித்து மாணவி ஒருவர் உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தளபதி விஜயின் உத்தரவின் படி விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

.

Trending News

Latest News

You May Like