'தங்கலான்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!

தமிழில் 'பூ' 'மரியான்' உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை பார்வதி. சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்கள உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பார்வதி இந்தாண்டு வெளியாக உள்ள தங்கலான் படத்திலும் நடித்துள்ளார்.
இன்று (ஏப்ரல் 7) தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கம் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இல்லாமல் தங்கலான் படத்திலிருந்து சிறப்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பர்த்டே ட்ரீட் கொடுத்திருக்கிறது.
இந்த ஆண்டு பொங்கலுக்கு தங்கலான் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் சோலோவாக ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்துக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசியாக மார்ச் 29 என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தேர்தல் காரணமாக தங்கலான் படமும் ஒரேயடியாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மே அல்லது ஜூன் மாதம் தான் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.