1. Home
  2. தமிழ்நாடு

தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் அதிமுகவில் பொறுப்பு..!

1

அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் தளவாய் சுந்தரம் செயல்பட்டதாக தெரிவித்து, அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாக சில நாள்களுக்கு முன்பு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்து இருந்தார்


இந்த நிலையில், தளவாய் சுந்தரம் உரிய விளக்கம் அளித்ததால், அவர் வகித்துவந்த கட்சிப் பதவிகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என். தளவாய்சுந்தரம், கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட காரணத்தால், அதுசம்பந்தமாக உரிய விளக்கம் கேட்டு, 8.10.2024 அன்று அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார். அந்நிகழ்வில் கலந்துகொண்டது சம்பந்தமாக, தளவாய்சுந்தரம் வருத்தம் தெரிவித்து தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் என். தளவாய்சுந்தரம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like