பள்ளிக்கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் தளபதி விஜய் வீடியோ பதிவேற்றம்..!
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை அடையாளம் தெரிய மர்மநபர்கள் முடக்கியுள்ளனர். அத்துடன், நடிகர் விஜய்யின் திரைப்படங்களில் வரும் வீடியோ காட்சிகளை, பள்ளிக்கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் இந்தி பதிப்பு வீடியோவாக பள்ளிக் கல்வித் துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகிறது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், தமிழ்நாடு டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் காவல்துறையினர், ஹேக்கர்களைத் தேடி வருகின்றனர்.