மக்களுக்கு தளபதி விஜய் முக்கிய வேண்டுகோள்..!

40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள் பலரும் வாக்குச் சாவடிக்கு சென்று வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையிலும், எடப்பாடி பழனிசாமி சேலம் சிலுவம்பாளையத்திலும், அண்ணாமலை கரூர் தொட்டாம்பட்டியிலும், சீமான் சென்னை நீலாங்கரையிலும் வாக்களித்தனர். அதேபோல ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, த்ரிஷா என திரைப் பிரபலங்களும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்றினார்.
இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு நீலாங்கரை வாக்குச் சாவடிக்கு வந்தார். வாக்குச் சாவடிக்குள் விஜய் நுழைந்ததும் அவரை பார்க்க கூட்டம் முண்டியடித்ததால் நெரிசல் உண்டானது. ஆனால், நெரிசலுக்கு மத்தியில் விஜய்யை காவல் துறையினரும், பாதுகாவலர்களும் பத்திரமாக அழைத்துச் சென்றனர்.வாக்குச் சாவடி அதிகாரிகள் விவரங்களை சரிபார்த்த பிறகு, விஜய் தனது வாக்கினை செலுத்தினார். அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு வீடு சென்றார்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார். இதையடுத்து அவர் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ X தளத்தில், "நான் எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்கு உடனே சென்று, உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) April 19, 2024
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம் pic.twitter.com/SboEtwyt83