கேரளாவில் தளபதி விஜய்..! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்..!

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'THE GREATEST OF ALL TIME' திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 'AGS என்டர்டைன்மென்ட்' நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, அஜ்மல் அமீர், லைலா, ஜெயராம், பிரேம்ஜி, மோகன் மற்றும் வைபவ் ரெட்டி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழகத்தில் எந்த அளவுக்கு நடிகர் விஜய்க்கு ரசிகர் கூட்டம் உள்ளதோ அதே அளவிற்கு கேரளாவிலும் ரசிகர் கூட்டம் உள்ளது. கடைசியாக காவலன் திரைப்படத்திற்காக கேரளா சென்ற நடிகர் விஜய். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படத்தின் படப்பிடிப்பிற்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளா செல்கிறார். இதேபோல் அண்மையில் வெற்றி பெற்ற 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் இயக்குனரான சிதம்பரம் பேட்டி ஒன்றில் விஜய் படம் வெளியாகும் போது கேரளா திருவிழா போல் காணப்படும் எனக் கூறினார். அதே போல் விஜய்யின் கடந்தாண்டு வெளியான 'லியோ' படமும் கேரளாவில் நல்ல வரவேற்பை பெற்றது.
திருவனந்தபுரம் விமானநிலையத்தில் மாலை விமான நிலையம் வரும் நடிகர் விஜய்க்கு காலையிலிருந்து காத்திருந்தனர் கேரள ரசிகர்கள். கேரள மக்களே வியக்கும் அளவிற்கு விஜய் ரசிகர்களின் கூட்டம் அலை மோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல் அதிகாரிகள் தினறினர். பின்னர், திருவனந்தபுரம் விமானநிலையம் வந்தடைந்த நடிகர் விஜயை மலர் தூவி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
கேரள ரசிகர்களின் ஆரவாரத்தின் மத்தியில் விஜய்..
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 18, 2024
Location: திருவனந்தபுரம் #vijay | #vijaypoliticalentry | #kerala #News18TamilNadu pic.twitter.com/iDL0swQa4Y