#BREAKING : த.வெ.க கொடியை ஏற்றினார் தளபதி விஜய்..!
விக்கிரவாண்டி வி சாலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கோலாகலமாக மற்றும் மக்கள் பேராதரவுடன் ஆரம்பமானது.
இன்று மாலை 4 மணியளவில் தவெக முதல் மாநில மாநாட்டு மேடைக்கு விஜய் வருகை தந்தார். வந்தவுடன் நேரடியாக ரசிகர்களை பார்க்க சென்றார் விஜய்.
Ramp-ல் நடந்துசென்றபோது தொண்டர்கள் வீசிய கட்சித் துண்டுகளை கழுத்தில் அடுக்கிக்கொண்ட கட்சியின் தலைவர் விஜய்.அதன் பின் சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் விஜய்.
இறுதியாக மாநாட்டுத் திடலில் தவெக கொடியை ஏற்றினார் விஜய்! 100 அடி கொடிக்கம்பத்தில் ரிமோட் மூலம் கட்சி கொடியை ஏற்றினார் விஜய்