இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறிய தளபதி விஜய்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கோட்’ படம் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், விஜய்யின் 69வது படமும், கடைசி படமுமான ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
விஜய்யின் கடைசி படம் இது என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், இந்த படத்திற்காக நடிகர் விஜய் ரூ.275 கோடி சம்பளமாக பெற உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. நடிகர் ஷாரூக்கான் ரூ.250 கோடி சம்பளம் பெரும் நிலையில் இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகராக அவர் உள்ளார். விஜய்யிம் சம்பளம் உறுதியானால் ஷாரூக்கானின் சாதனையை விஜய் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னடம் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பல பிளாக்பஸ்டர்களை வழங்கிய புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான kvn தளபதி 69 படத்தைத் தயாரிக்கிறது. அதோடு, அந்நிறுவனத்திற்கு கோலிவுட்டில் இது முதல் படமாகும். முந்தைய சாதனைகளை முறியடிக்கும் சம்பளத்துடன் விஜய் படத்தை தயாரிப்பதன் மூலம், தளபதி 69 ஷாருக்கானின் முந்தைய வருவாயை முறியடித்துள்ளது. அவர் தனது கடைசி படத்திற்காக ரூ.250 கோடியை சம்பளமாக வாங்கியிருந்தார். இந்நிலையில் அந்த சாதனையை முறியடித்து, இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற அந்தஸ்தை விஜய் எட்டியுள்ளார். அவரது கடைசி படம் என்பதால் இதன் மீது நிலவும் பிரமாண்ட எதிர்பார்ப்பை உணர்ந்து, இந்நிறுவனம் தளபதி 69 படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.
தி கோட் படம் உலகம் முழுவதும் 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே, சுமார் 150 கோடிக்கும் அதிகமாக தி கோட் படம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தி கோட் படத்திற்கே விஜய் சுமார் 250 கோடி வரை ஊதியம் பெற்றதாக கூறப்படுகிறது.