1. Home
  2. தமிழ்நாடு

தளபதி 68 படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் வெளியானது..!

1

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ படத்தில் நடித்து வருகின்றார்.ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் இப்படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

மங்காத்தா படத்தில் அஜித் நடித்ததை தொடர்ந்து பல ஆண்டுகளாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த நிலையில் எதிர்பார்த்தபடியே வழக்கமான வெங்கட் பிரபுவின் ஸ்டைலில் இப்படம் உருவாகி வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் சர்வதேச கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த், விடிவி கணேஷ், ஜெயராம், பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜ்மல் அமீர், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது

இந்நிலையில், விஜய் நடிக்கும் இப்படத்திற்கு Greatest Of All Time என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், அதிரடியாக வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். 


 


 

Trending News

Latest News

You May Like