1. Home
  2. தமிழ்நாடு

விவசாயிகளுக்கு விருந்து கொடுக்க தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்தார் தலைவர் விஜய்..!

1

தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை கிராமத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்..

இதில் பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக தன்னுடைய அரசியல் எதிரி திமுக தான் என்று பிரகடனப்படுத்தினார் விஜய். மாநாட்டில் அன்று விஜய் பேசிய விதமும் நடந்து கொண்ட விதமும் இதுவரை கண்டிராத ஒன்றாக இருந்தது. இந்நிலையில் தனது மாநாட்டிற்கு இடம் வழங்கிய விவசாயிகளுக்கு இன்று விருந்து கொடுத்துள்ளார் விஜய்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டிற்கு இடம் கொடுத்த விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விவசாயிகளின் குடும்பத்திற்கு விருந்து அளிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று விஜய்யின் விருந்தில் பங்கேற்க குடும்பத்தோடு வந்தனர் விவசாயிகள். அவர்களை வாசலுக்கே வந்து வரவேற்று அழைத்துச்சென்றார் அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

மாநாடு நடத்த இடம் கொடுத்த விவசாயிகளுக்கு வாடகை கட்டணத்தை கொடுத்ததோடு விடாமல், அவர்களுக்கு நன்றி தெரிவித்து கவுரவிக்கும் வகையில் விருந்து அளித்த விஜய்யின் செயல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


 

Trending News

Latest News

You May Like