மாஸாக வெளியான தலைவர் 171 டீஸர்.. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா ?

ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவரின் 171-வது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில், ரஜினியின் தோற்றம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இதில் முக்கிய கேரக்டரில், ஷோபனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மைக் மோகனிடமும் பேசி வருவதாகவும் ஷாருக்கான் இதில் கவுரவ வேடத்தில் நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இப்படத்தில் நாகார்ஜுனா, ரன்வீர் சிங், சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் நடிகை ஷோபனா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில், ரஜினியின் 171-வது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், படத்தின் பெயர் 'கூலி' என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, ரஜினிக்கு வில்லனாக நடிகர் மைக் மோகன் நடிக்கவுள்ளதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு கூலி என பெயர் வைத்துள்ளனர்