முதல் போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்துள்ள தல தோனி!

அபுதாபியில் மும்பை அணியை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல்-இல் கேப்டனாக தனது 100ஆவது வெற்றியை மகேந்திர சிங் தோனி பதிவு செய்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின.ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி நகரில் போட்டி நடைபெற்றது.
மார்ச் மாதம் நடக்க வேண்டிய ஐபிஎல் போட்டி கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. அதுவும் இந்தியாவில் நடத்த முடியாது என்பது ஐக்கிய அரசு அமீரகத்தில் நடத்தப்படுகிறது.
முதல் போட்டி என்பதைத் தாண்டி தல தோனி கடந்த ஒரு வருடமாக விளையாடமால் இருந்ததால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியின் தலைமையில் வெற்றி பெற்றுள்ளது.
இருப்பினும் தோனி ஏதேனும் சாதனை செய்வார், ரசிகர்களை கொண்டாட வைப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கேற்ப சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தனது புதிய மைல்கல்லை எட்டினார்.
போட்டியில் 2 கேட்ச்களை தோனி பிடித்தார். அதன்மூலம் ஐபிஎல் போட்டிகள் 100 கேட்ச்கள் என்ற மைல்கல்லை அவர் அடைந்தார். அதுமட்டுமின்றி மும்பையை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக இருந்து தனது 100வது வெற்றியை தோனி பதிவு செய்திருக்கிறார்.
newstm.in