1. Home
  2. தமிழ்நாடு

திருச்செந்தூரில் தைப்பூசம்: வெறிச்சோடிய கோயில் நகரம் !!

திருச்செந்தூரில் தைப்பூசம்: வெறிச்சோடிய கோயில் நகரம் !!


திருச்செந்தூரில் இன்று (ஜன. 18) நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லாததால் வெறிச்சோடிக் காணப்படுகிறது கோயில் நகரம்.

தை மாதத்தில் பொங்கல் பண்டிகை போன்று தைப்பூசத் திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. அனைத்து முருகன் கோவிலிலும் பக்தர்கள் நிரம்பி முருகனை தரிசித்து வரம்வேண்டி அருள்வர். ஆனால், கொரோனா பாரணமாக இந்தாண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தைப் பொங்கல் (ஜன. 14) முதல் செவ்வாய்க்கிழமை (ஜன. 18) தைப்பூசம் வரையில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூரில் தைப்பூசம்: வெறிச்சோடிய கோயில் நகரம் !!

வழக்கமாக தைப்பூசத்துக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளிலிருந்தும் என லட்சக்கணக்கான பக்தா்கள் திருச்செந்தூருக்கு வந்து வழிபடுவாா்கள். அதிலும் பக்தா்கள் வேல் குத்தியும், காவடி எடுத்தும், பாதயாத்திரையாக வந்தும் வழிபடுவது சிறப்பம்சமாகும்.

ஆனால் அரசின் தடை உத்தரவால் நிகழாண்டு, திருச்செந்தூா் கோயிலில் தைப்பொங்கல் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்ட பக்தா்கள் அதிருப்தி அடைந்தனர். அதேநேரத்தில் ஜன. 13ஆம் தேதி வரை லட்சக்கணக்கில் பக்தர்கள் கோயிலில் குவிந்தனா். தைப்பூசம் நாளில் கடல் அலையை மக்கள் தலையா என கருதும் அளவுக்கு கூட்டம் கூடும்.

திருச்செந்தூரில் தைப்பூசம்: வெறிச்சோடிய கோயில் நகரம் !!

ஆனால் இந்தாண்டு பக்தா்களுக்கு அனுமதியில்லாததால் கோயில் வளாகம் மற்றும் நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் கூடுதலாக காவல்துறையினா் ஈடுபட்டுள்ளனா். பாத யாத்திரை செல்ல முடியாமல் பக்தர்கள் வீட்டிலேயே வழிபாடு நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like