1. Home
  2. தமிழ்நாடு

தைப்பூசத்திருவிழா – ஜனவரி 12 கொடியேற்றம்!!

தைப்பூசத்திருவிழா – ஜனவரி 12 கொடியேற்றம்!!


பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவுக்கு வருகிற 12ஆம் தேதி காலை 6.45 மணிக்கு கொடியேற்றப்படுகிறது.

இதையடுத்து 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு வெள்ளிரதமும் நடைபெறுகிறது. மேலும் 18ஆம் தேதி தைப்பூச திருவிழாவும், அன்று மாலை 4.45 மணிக்கு திருத்தேரோட்டம், 24ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேரும் நடக்கிறது.

எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோவில் நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும்.

தைப்பூசத்திருவிழா – ஜனவரி 12 கொடியேற்றம்!!

கைகளை கழுவ கிருமி நாசினி, முககவசம் வைக்கப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல்வேறு அரசு துறைகளின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like