1. Home
  2. தமிழ்நாடு

தாய்லாந்தில் அவசர நிலை பிரகடனம்..!

Q

கம்போடியா,தாய்லாந்து நாடுகள் இடையே புராதன கோயில் விவகாரம் தொடர்பாக சண்டை மூண்டுள்ளது. இருநாடுகள் இடையேயான இந்த மோதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பேர் இடம்பெயர்ந்து உள்ளனர்.

சண்டை தொடர்ந்து நீடிப்பதால், தாய்லாந்தில் சர்வதேச எல்லையை ஒட்டிய 8 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. எல்லைப் பகுதியில் இருக்கும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்ற இருநாடுகளும் அறிவுறுத்தி உள்ளன.

முன்னதாக, கம்போடியாவுடனான பிரச்னை நுட்பமானது, சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும் என்று தாய்லாந்தும், அமைதியாக இந்த பிரச்னையை தீர்க்கவே விரும்புவதாகவும் கம்போடியாவும் அறிவித்து இருந்தது.

Trending News

Latest News

You May Like