தவெக-வில் இணைந்தார் தாடி பாலாஜி..!
தளபதி விஜய்க்கு நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள் என பலரும் தொடர்ந்து வரவேற்பு அளித்து வருகின்றனர், தளபதி விஜய்யுடன் பல படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் தாடி பாலாஜி தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்.
பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்று தாடி பாலாஜி கட்சியில் இணைந்தார். மேலும் பல நடிகர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.