1. Home
  2. தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய் முகத்தை நெஞ்சில் பச்சை குத்திக் கொண்ட தாடி பாலாஜி!

1

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை. ஆனால் அரசியல் களத்தில் விஜய்யின் சினிமா பிம்பம் ஏற்படுத்திய தாக்கத்தின் எதிரொலி இருப்பதை மறுக்க முடியாது.

விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், பல நடிகர்கள் விஜய்யின் அரசியல் கட்சியில் தங்களை நேரடியாக இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களில் முக்கியமானவர் நடிகர் தாடி பாலாஜி. இவர், விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட 10 படங்களில் விஜய்யின் நண்பராக நடித்துள்ளார். விஜய் கட்சி தொடங்கிய பின்னர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட தாடி பாலாஜி, கட்சிப் பணிகள் மேற்கொள்வதை தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்தும் வருகின்றார்.


இப்படியான நிலையில், நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் முகத்தினை தனது நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டுள்ளார். மேலும் விஜய்யின் முகத்திற்கு கீழ், நெஞ்சில் குடியிருக்கும் என்ற வாசகத்தையும் பச்சை குத்திக் கொண்டுள்ளார். இவரது இந்த செயல் பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் மத்தியில் நல்ல கவனத்தினை ஈர்த்துள்ளது.

1

நான் பச்சை குத்திக் கொண்டதைப் பார்த்து சிலர், சினிமா நடிகரின் முகத்தை பச்சை குத்திக் கொண்டுள்ளேன் எனக் கூறலாம். ஆனால் நான் உண்மையில் ஒரு தலைவனின் முகத்தை பச்சை குத்திக் கொண்டுள்ளேன். எனது மகள் மற்றும் மனைவியின் பெயரை பச்சை குத்தும்போது இருந்த சந்தோஷத்தைவிடவும் இப்போது பல மடங்கு அதிக சந்தோஷத்தில் இருக்கின்றேன்.நான் நெஞ்சில் பச்சை குத்திக் கொள்ளக் காரணமே, அவர் கூறும் 'என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற வார்த்தைகள்தான். இப்போது நான் இறக்கும் வரை எனது தலைவர் என் நெஞ்சில் குடியிருப்பார். என் நெஞ்சில் குடியிருக்கும் தலைவா... பச்சை குத்தும்போது வலித்தது. ஆனால், தலைவர் முகத்தை நெஞ்சில் பார்க்கும்போது வலி எல்லாம் பறந்துவிட்டது. மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறினார்.


 


 

Trending News

Latest News

You May Like