டெஸ்லா இந்திய சந்தைக்குள் நுழையத் தயார் - ஷோரூம் வாடகை மட்டும் ரூ.35 லட்சம்!
டெஸ்லா நிறுவனம் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள ஒரு வணிக கட்டிடத்தின் தரை தளத்தில் 4000 சதுர அடி இடத்தை வாடகைக்கு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கு டெஸ்லா நிறுவனம் தனது கார் மாடல்களை காட்சிப்படுத்த உள்ளது. இதற்கு மாத வாடகை ஒரு சதுர அடிக்கு சுமார் 900 ரூபாய். அதாவது மாதம் மாதம் சுமார் ரூ. 35 லட்சமாகும். இந்த ஒப்பந்தம் 5 வருடங்களுக்கு போடப்பட்டுள்ளது. டெஸ்லா டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் 2-வது ஷோரூமையும் திறக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் டெஸ்லா வாகனங்கள் 21 லட்சம் ரூபாய் முதல் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் EV சந்தையில் பிரீமியம் விலையாக இருக்கும்.
டெஸ்லா சைபர்ட்ரக் - ரூ. 50.70 லட்சம்
டெஸ்லா மாடல் 2 - ரூ. 45 லட்சம்
டெஸ்லா மாடல் 3 - ரூ. 60 லட்சம்
டெஸ்லா மாடல் Y - ரூ. 70 லட்சம்
டெஸ்லா மாடல் S - ரூ. 1.50 கோடி
டெஸ்லா மாடல் X - ரூ. 2 கோடி
இந்திய அரசு இவி வாகனங்களை மக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் விதமாக சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகையை அறிவித்தால் இந்தியாவில் கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு ஏதுவாக இருக்கும்.