1. Home
  2. தமிழ்நாடு

அசத்தும் டெஸ்லா..! வீட்டு வேலை எடுபிடி வேலைக்கு வந்தாச்சி ரோபோ..!

1

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கடந்த வியாழன் அன்று, ‘வீ ரோபாட் ‘ என்ற நிகழ்ச்சியை டெஸ்லா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்களை, வரவேற்ற ரோபோக்கள், நடனம் ஆடி வரவேற்றன. உணவு, டிரிங்க்ஸ் வழங்குவது என எல்லோருடனும் பழகி, பேசிச் செல்பி எடுத்து அசத்தியது.ரோபோக்களுக்கு ஆப்டிமஸ் ரோபோ என டெஸ்லா நிறுவனம் பெயரிட்டுள்ளது.

ஆப்டிமஸ் ரோபோக்களை அறிமுகம்செய்து, டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் கூறுகையில்,

‘இந்த ஆப்டிமஸ் ரோபோக்கள், உங்களுக்குத் தேவையான அடிப்படை செயல்கள், சேவைகளை வழங்கும்.

உங்களுக்கு ஓர் ஆசிரியராக, குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுவது, வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சிக்கு செல்வது என உங்கள் நண்பன்போலச் சேவைகளை வழங்கும். வீட்டில் உள்ள அலமாரியில், அந்தந்த பொருட்களை அடுக்குவது, சமையலறை பாத்திரங்களைக் கழுவுவது, சுத்தம் செய்வது என நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ, அதை அந்த ரோபோக்கள் செய்து அசத்திவிடும்.

உங்களுடன் நன்றாகப் பேசி, நடந்து வரும். மதுபான கூடாரங்களில், பானங்களை வழங்கிச் சேவை செய்யும்.இந்த ஆப்டிமஸ் ரோபோக்களின் விலை, ரூ.17 லட்சத்திலிருந்து 26 லட்ச ரூபாய் வரை இருக்கும்.இவ்வாறு எலான் மஸ்க் கூறினார்.

ரோபோக்கள் குறித்து சிலர் கூறுகையில், இந்நிகழ்ச்சி, உண்மையிலேயே மறக்கமுடியாத வரலாற்று நிகழ்வாகும்.ரிமோட் மூலமாக இயங்கி பானங்களை வழங்கினாலும், இன்னும் எங்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்து ஆச்சர்யபடுத்தி விட்டது என்றனர்.

Trending News

Latest News

You May Like