வெடித்து சிதறிய டெஸ்லா கார்..!
அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில்,டொனால்டு டிரம்ப் ஹோட்டல் முன்பு, டெஸ்லாவின் சைபர் டிரக் வெடித்து சிதறியது. இதில் தீயில் கருகி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். ஹோட்டல் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லாவின் சைபர் டிரக் திடீரென வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.
இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் சந்தேகப்படுகிறார். இது குறித்து டெஸ்லாவின் உயர் அதிகாரிகள் குழு தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெரு மற்றும் ஐபர்வில்லி சந்திப்பில், அதிவேகமாக வந்த டிரக் , கூட்டத்தில் புகுந்ததில் 15 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதல் என விசாரணையில் தெரியவந்தது.
இதற்கு, 'வன்முறையை பொறுக்க மாட்டோம். நம் நாட்டில் குற்ற விகிதம் இதுவரை யாரும் கண்டிராத அளவில் உள்ளது' என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் தெரிவித்துள்ளார்.