1. Home
  2. தமிழ்நாடு

ராமர் கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் : ராமர் கோயிலை இடிப்போம் - எச்சரித்த பயங்கரவாத அமைப்பு..!

1

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால், அயோத்தியா ராமர் பிறந்த இடம். ஆகவே, அந்த இடத்தில் மீண்டும் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று ஹிந்துக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி ஆயிரக்கணக்கான ஹிந்து கரசேவகர்கள் ஒன்று கூடி பாபர் மசூதியை இடித்தனர். இது தொடர்பாக நடந்த சட்டப்போராட்டத்தில், அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததற்காக ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றதால், ஹிந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்புக் கிடைத்தது. அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


இதையடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக ராம ஜென்ம பூமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, 1,800 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமானப் பணிகள் நடந்தன.

தற்போது இந்த ராமர் கோவில் மக்களின் பயன்பாட்டிற்கு பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது.

இந்நிலையில் , அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை இடிப்போம் என பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான ஆடியோ செய்தியும் வெளியாகியுள்ளது. இந்த ஜெய்ஷ் அமைப்பின் எச்சரிக்கையால் போலீசார் தீவிர நடவடிக்கையில் உள்ளனர். மேலும், அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற பாதுகாப்பு அமைப்புகளும் தயார் நிலையில் உள்ளது.


 

Trending News

Latest News

You May Like