1. Home
  2. தமிழ்நாடு

தெலங்கானாவில் பயங்கரம்..!கோவில் ஊழியர் மீது ஆசிட் வீச்சு..!

Q

சைதாபாத்தில் உள்ள லட்சுமி கோவிலில் கணக்காளராக பணியாற்றி வருபவர் கோபி. இவர் கோவில் வளாகத்தில் அவருக்கான இருக்கையில் அமர்ந்து, கணக்கு வழக்கு விபரங்களை சரிபார்த்து கொண்டிருந்தார்.

அப்போது, தொப்பி அணிந்தபடி அங்கு வந்த மர்ம நபர், திடீரென பாக்கெட்டில் இருந்த பாட்டிலை எடுத்து, அதில் உள்ள ஆசிட்டை கோபியின் மீது ஊற்றினார். பின்னர், அந்த நபர் அங்கிருந்து வேக வேகமாக வெளியேறினார்.

ஆசிட் பட்டதால் வலியில் துடித்த கோபி, தன் மீதுள்ள ஆசிட்டை அப்புறப்படுத்த முயன்றார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே, அவரை அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் சைதாபாத் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியதற்கான காரணம் தெரியாத நிலையில், அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்

Trending News

Latest News

You May Like