1. Home
  2. தமிழ்நாடு

காரைக்குடியில் பயங்கரம்..! பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை..!

Q

அண்மையில் ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் வைத்து, ஒரு கும்பலால் பிரபல ரவுடி ஜான் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான தாக்கம் அடங்குவதற்குள், காரைக்குடியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் சேர்வாஊரணியைச் சேர்ந்த பிரபல ரவுடி மனோஜ் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்றுள்ளார். அப்போது, காரில் வந்த மர்மகும்பல் மனோஜை வழிமறித்து, ஓட ஓட விரட்டி படுகொலை செய்தனர். மனோஜின் நண்பர்கள் இருவர் காயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், மனோஜின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like