1. Home
  2. தமிழ்நாடு

டெல்லியில் பயங்கரம்..! இளம்பெண்ணை தூக்கி சென்று மாறி மாறி பலாத்காரம் செய்த 10 பேர்..!

1

டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 26 வயதான பழங்குடியின இளம்பெண் ஒருவர், தனது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் பாகூருக்கு விடுமுறையை கழிப்பதற்காக வந்தார். பின்னர் படேர்கோலா கிராமத்தில் உள்ள தனது காதலனுடன் இளம்பெண் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது படேர்கோலா உயர் நிலைப்பள்ளி மைதானம் பகுதியில் 10 பேர் கொண்ட கும்பல் அவர்களைத் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தியது.

 

பின்னர், அவரது காதலனை அந்த கும்பல் கடுமையாக தாக்கி விட்டு இளம்பெண்ணை தூக்கி சென்று மாறி மாறி கதற கதற பலாத்காரம் செய்தனர். இதனால் இளம்பெண் சுயநினைவு இழந்தார். இதனால் அவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து அந்த கும்பல் அவரை விட்டுச் சென்றது. இதனையடுத்து, மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் நடந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் கதறியபடி தெரிவித்துள்ளார்.

rape

இந்த சம்பவம் தொடர்பாக மகேஷ்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இளம்பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சிறப்பு புலனாய்வுக்குழு அஜித்குமார் தலைமையில் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 376 டி பிரிவின் கீழ் 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்தத சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. துப்பாக்கி முனையில் 10 பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Police

ஜார்க்கண்டில் இதுபோல கூட்டுப் பலாத்காரச் செயல் நடப்பது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இம்மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள விமான நிலையப்பகுதியில் தனது ஆண் நண்பருடன் இருந்த பெண் தொழில்நுட்பக் கலைஞர் 10 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இருவர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like