1. Home
  2. தமிழ்நாடு

சீனாவில் பயங்கரம்... கண்ணில் பட்டவர்களை குத்திக்கொன்ற சைக்கோ சிறுவன்!

1

சீனாவில் பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது .

சீனாவின் வுக்ஸி நகரில் 21 வயது வாலிபர் கத்தியால் சரமாரியாக குத்தியதில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த வாலிபர் அங்குள்ள பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர் என தெரியவந்துள்ளது. அந்த வாலிபர் சைக்கோ கொலையாளி போல் தனது கண்ணில் தென்பட்ட அவர்களை சரமாரியாக கொடூரமாக குத்தியுள்ளார்.
 

இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 17 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. எந்த சம்பவம் காண்போரை பதைபதைக்க வைக்கும் வகையில் உள்ளது.


 

Trending News

Latest News

You May Like