ஆந்திராவில் பயங்கரம்..! காதலனை கட்டி போட்டு கண் எதிரே காதலி கூட்டு பலாத்காரம்..!

பிறந்த நாளன்று காதலரை கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டா பகுதி சேர்ந்த 20 வயது இளம்பெண்.அப்போது அந்த இளைஞர் தனது காதலியை பிலிகாட் ஏரி அருகே உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அப்போது அங்கு குடிபோதையில் இருந்த 2 வாலிபர்கள் ஜோடியை நோக்கி வந்தனர். இருவரும் அந்த இளைஞரை தாக்கி, கை, கால்களை கட்டியுள்ளனர். அதன்பிறகு அந்த வாலிபர் முன்னிலையில் காதலியை பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீஹரிகோட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.