புனித யாத்திரைக்கு முன்னதாக பயங்கர சதித்திட்டம்!

ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த தீவிரவாத தாக்குதல், முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் என தெரியவந்துள்ளது. வரும் ஜூலை 3-ம் தேதி தொடங்க உள்ள அமர்நாத் யாத்திரையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் பகுதிக்கு அருகே உள்ள பைஸ்ரீன் பள்ளத்தாக்கில் நுழைந்த தீவிரவாதிகள், அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அமைச்சர் அமித்ஷா அப்பகுதிக்கு விரைந்துள்ளார்.