சீனியரை காரில் கடத்தி சரமாரியாக அடித்த பத்தாம் வகுப்பு ஜூனியர் மாணவர்கள்!
சீனியரை காரில் கடத்தி சரமாரியாக அடித்த பத்தாம் வகுப்பு ஜூனியர் மாணவர்கள்!

12 வகுப்பு மாணவன் ஒருவனை நான்கு 10 வகுப்பு மாணவர்கள் காரில் கடத்தி சட்டையை கழற்றச்சொல்லி அடித்து துன்புறுத்தி அதனை வீடியோவாக எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் 12ஆம் வகுப்பு மாணவன் காரில் தனது இரண்டு நண்பர்களுடன் தனது பள்ளியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியை சந்திக்கச் சென்றிருந்தான்.
அந்த சிறுமியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அதேப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர்கள் அவரை பிடித்து கோவிந்தபுரம் வனப்பகுதிக்கு கடத்தி சென்றனர்.
பின்னர் அந்த மாணவனின் வாயில் துணியை வைத்து அடைத்து, அவனின் மொபைலில் உள்ள சமூக ஊடக கணக்குகளை டீஆக்டிவேட் செய்தனர். சில புகைப்படங்களையும் அவர்களின் போனுக்கு மாற்றினர்.
பின்னர் அவனின் சட்டையை கழற்றசொல்லிவிட்டு குச்சி மற்றும் பெல்ட்டால் அடித்து துன்புறுத்தி அதனை வீடியோவாகவும் எடுத்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் மாணவியுடன் பேசியதற்காக இந்த தாக்குதல் நடந்திருக்குமோ என்று விசாரித்து வருகின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in