1. Home
  2. தமிழ்நாடு

தூத்துக்குடியில் பதற்றம்.. எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் காரை நொறுக்கிய மர்ம நபர்கள் !

தூத்துக்குடியில் பதற்றம்.. எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் காரை நொறுக்கிய மர்ம நபர்கள் !


தூத்துக்குடி சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வன் கடந்த 17ஆம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டடார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் நடத்த விசாரணையில் செல்வம் கொலையில் அதிமுக நிர்வாகி ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. செல்வம், சில மாதங்களுக்கு முன்பு பக்கத்து ஊரைச் சேர்ந்த அதிமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளர் திருமணவேல் என்பவரிடம் ஒரு நிலத்தை வாங்கியிருக்கிறார்.

அந்த நிலத்தகராறு காரணமாக செப்டம்பர் 17ஆம் தேதி இவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதற்கு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உடந்தையாக இருந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கைத் தொடர்ந்து ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆனால், ஆய்வாளர் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும். செல்வனின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கைகளை முன்வைத்து, செல்வனின் உடலையும் அவர்கள் வாங்க மறுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே செல்வன் கொலை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என செல்வனின் உறவினர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், செல்வனின் குடும்பத்தினரை சந்தித்து, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். அதனைதொடர்ந்து, சொக்கன்குடியிருப்பில் நடைபெற்ற போராட்டத்திலும் அவர் கலந்துகொண்டார்.

இந்த சூழலில், அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த விலையுயர்ந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கிச் சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like