பசும்பொன்னில் பதற்றம் : இபிஎஸ் சென்ற வாகனம் மீது செருப்பு, கல் வீச்சு..!
தேவர் ஜெயந்தி விழாவையொட்டி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தி விட்டு பசும்பொன் நினைவிடத்தை விட்டு வெளியேறி போது, சசிகலாவிற்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி என ஒரு தரப்பினர் கோஷமிட்டனர். இதனால், அங்கு சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் அவர் செல்லும் வழியில் உள்ள குளம் அருகே இபிஎஸ் வாகனம் சென்ற போது அதிமுக ஆட்சியில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தை சேர்ந்த முருகவேல் மற்றும் பொதி குளத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி ஆகிய இருவரும் இபிஎஸ் சென்ற வாகனம் மீது செருப்பு மற்றும் கல்லை வீசியுள்ளனர்.
அவர்கள் வீசிய கல் மற்றும் செருப்பு இபிஎஸ் சென்ற காருக்கு முன் சென்ற கார் மீது விழுந்தது. இதனையடுத்து இருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.