சென்னையில் பதற்றம்..! பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது..!
பிரபல ரவுடி சேதுபதி(30) துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். 5 கொலை வழக்குகள் உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் சேதுபதி 6 மாதமாக தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், சென்னையில் ரவுடி சேதுபதியை துப்பாக்கி முனையில் போலீசார் பிடித்துள்ளனர். சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி சேதுபதியை தனிப்படை போலீசார் செங்குன்றத்தில் வைத்து கைது செய்துள்ளனர். ரவுடி சேதுபதி மீது கொலை, கொள்ளை அடிதடி கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.போலீசார் வந்ததை அறிந்த ரவுடி சேதுபதி ஆயுதங்களை பயன்படுத்தி தப்பிக்க முயன்றதாகவும், அப்போது போலீசார் துப்பாக்கி முனையில் சேதுபதியை கைது செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சேதுபதியிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை அங்கிருந்து வேன் மூலம் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் துப்பாக்கி முனையில் ரவுடி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.