1. Home
  2. தமிழ்நாடு

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் : மத்திய அமைச்சர்.!

11

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 1ம் தேதி துவங்கியது. வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்கள் அச்சப்படத் தேவையில்லை. அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மீட்பு படையினர் ஏற்கனவே பணியில் உள்ளன. யாத்திரிகர்கள் பீதியடைய வேண்டாம். அதிகாரிகள் வழங்கும் அறிவுரைகளை பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என்று கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like