கோவையில் ட்ரோன் பயன்படுத்த தற்காலிக தடை..!
கோவை மாநகரில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழக முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு 8.8.24 மாலை 5 மணி முதல் 9.8.24 மாலை 04.00 மணி வரை (23 மணி நேரம்) பீளமேடு, ரேஸ்கோர்ஸ், உக்கடம் மற்றும் இப்பகுதிகளின் சுற்றுவட்டார பகுதிகள் தற்காலிக RED ZONE/NO FLY ZONE பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேலே குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன் இயக்க அல்லது பறக்கவிட அனுமதி இல்லை என கோவை மாநகர காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேலே குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன் இயக்க அல்லது பறக்கவிட அனுமதி இல்லை என கோவை மாநகர காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.