65 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவில்களில் அனுமதி இல்லை!

65 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவில்களில் அனுமதி இல்லை!

65 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவில்களில் அனுமதி இல்லை!
X

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் தற்போது கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. வரும் 30ஆம் தேதிக்கு பிறகு கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் உள்ள கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அப்போது வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும் என்றும் இந்து சமய அறிநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர், 10 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கோவில்களுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும், கோவில்களுக்கு உள்ளே செல்வதற்கு ஒரு நுழைவாயில், வெளியே வர ஒரு நுழைவாயில் அமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கர்ப்பிணிப் பெண்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது, வாசலிலேயே சானிடைசர் வைத்திருக்க வேண்டும், பக்தர்கள் மாஸ்க் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், தெர்மல் ஸ்கேனிங் சிஸ்டம் கடைப்பிடிக்கப்பட வேண்டும், பெரிய கோவில்களில் உள்ள ஏர்கன்டிஷனர் 24 – 30 டிகிரி என்கிற அளவில் தான் இயக்கப்பட்ட வேண்டும் என்ற வழிமுறைகளை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it