ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் விழா! அண்டாவில் அள்ள அள்ள வந்த கறி..!
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் அருகே உள்ள டி.துரைச்சாமிபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஸ்ரீீ மணிகட்டி மாடசாமி கோயில் உள்ளது. தீராத நோயில் இருந்து விடுபடவும், குடும்ப பிரச்னைகள் தீரவும், விவசாயம் செழிக்கவும் கோயில் வளாகத்தில் மணியைக் கட்டி வழிபட்டு வந்தால் இவை அனைத்தும் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் ஐதீகம். அதன்படி, இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற மணிகளை கட்டி வழிபட்டு வருகின்றனர்.
இக்கோயில் கொடை விழா, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புரட்டாசி மாதம் கடைசி வெள்ளி, சனி என 2 நாட்கள் நடைபெறும் ஆண்கள் மற்றும் பங்கேற்கும் அசைவ விருந்து நடைபெற்றது . மக்கள் காணிக்கையாக கொண்டு வந்த ஆடு கோழி சமைத்து படையிட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.எக்காரணத்தை கொண்டும் பெண்கள் சாப்பிட மாட்டார்கள்