1. Home
  2. தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - தெலுங்கு தேசம் கட்சி அறிவிப்பு..!

1

தெலங்கானா மாநிலத்தில் இருந்து போட்டியிட போவதில்லை என சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) கட்சி அறிவித்துள்ளது. என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் டிடிபி கட்சியின் இந்த அறிவிப்பு பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானாவில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை இன்னும் டிடிபி முடிவு செய்யவில்லை. அதே நேரம் ஜூன் அல்லது ஜூலை மாதம் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் டிடிபி போட்டியிடும் எனக் கூறப்பட்டு உள்ளது.

டிடிபி கட்சி செய்தித் தொடர்பாளர் ஜயோத்சனா திருனகரி இது தொடர்பாக தெரிவித்தார். அப்போது, அவர் கூறுகையில், “நாங்கள் என்டிஏ கூட்டணியில் அங்கம் வகித்தாலும், நாங்கள் மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் இருந்து போட்டியிடப் போவதில்லை. தெலங்கானாவில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவெடுப்பார்கள். அது பற்றி இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை.”, என்றார்.

டிடிபி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர் கட்சி பின்னடைவைச் சந்தித்து வருகிறது. தலைவர் கைது செய்யப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை. இதனால் கட்சியின் மாநிலத் தலைவர் கசானி ஞானேஷ்வர், கட்சியை விட்டு விலகி பாரதிய ராஷ்டிரிய சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியில் இணைந்தார். இதனால் மாநிலத்தில் தலைமை இல்லாமல் கட்சி சிதறுண்டு கிடக்கிறது. பலர் கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர்.

தெலங்கானாவில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது, 3.51 சதவீத வாக்குகளை பெற்றதோடு, 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சியிரை பிற கட்சிகள் சேர்த்துக் கொண்டு வெற்றி பெற்றன. கட்சிக்கு புதிய மாநில தலைமை நியமிப்பது பற்றி வருடாந்திர மாநாட்டில் முடிவு செய்யப்படும் என டிடிபி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானாவில் இந்த முறை பாஜக செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்று அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில், என்டிஏ கூட்டணி கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து இருப்பது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like