பிரபல தெலுங்கு நடிகை ஹேமா கைது..!

சமீபத்தில் பெங்களூரில் போதை பார்ட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த போதை பார்ட்டியில் ஐடி ஊழியர்கள், மாடல் அழகிகள் ,நடிகர் நடிகைகள், தெலுங்கு சினிமா பிரபலங்கள் கன்னட திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட எல்லோரும் கலந்து கொண்டு போதையில் இருந்துள்ளனர்.
இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வர அங்கு சென்று சோதனை நடத்தியதில் போதைப்பொருட்கள் பயன்படுத்தி பார்ட்டி நடத்தியது வந்தது.
உடனடியாக ஒரு சில பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதை எடுத்து அந்த போதை பார்ட்டில் கலந்து கொண்ட பிரபல தெலுங்கு நடிகையான ஹேமா, நடிகர் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் ஜானி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த ரேவ் பார்ட்டி தொடர்பாக, தெலுங்கு நடிகை ஹேமாவிடம் கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இந்த ரேவ் பார்ட்டிக்கு செல்லவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட போதை பொருள் உட்கொண்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நடிகை ஹேமாவை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.