பிரபல தெலுங்கு நடிகருக்கு கௌரவ டாக்டர் பட்டம்…! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

ஆர் ஆர் ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண்.இதைத் தொடர்ந்து புச்சிபாபு இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிக்கிறார். இது ராம்சரண் நடிக்கும் 16-வது படமாகும். மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளார்.
இந்நிலையில், நடிகர் ராம்சரணுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில், வரும் 13-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற் இருக்கும் நடிகர் ராம்சரணின் கலைத்திறமையை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழாவில் ராம்சரண் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
Today's Headline :
— Trends RamCharan ™ (@TweetRamCharan) April 11, 2024
Ramcharan was awarded an honorary doctorate at the University of Wales Convocation, Chennai !
The Convocation will take place on 13th & @AlwaysRamCharan will be the Special guest 🦁🔥 pic.twitter.com/R5v8XXQjc5