1. Home
  2. தமிழ்நாடு

“முதலில் ஜெயித்து காட்டச் சொல்லுங்க... ஹெச்.ராஜா எங்கு போட்டியிட்டாலும் தோல்வி தான்” - சேகர்பாபு

ஹெச்.ராஜா சேகர்பாபு

பாஜக ஆட்சி அமைத்தால் இந்து சமய அறநிலையத்துறை ஆன்றோர் சான்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என எச்.ராஜா கூறுகிறார். அத்தைக்கு மீசை முளைத்தால்தான் சித்தப்பா என அழைக்கப்படுவார். எச்.ராஜா முதலில் எங்காவது தேர்தலில் நின்று வெற்றி பெறட்டும். அதன் பிறகு இந்து சமய அறநிலையத்துறை ஆன்றோர் சான்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என பேசட்டும். எச்.ராஜா எங்கு போட்டியிட்டாலும் தோற்கடிக்கப்படுவார், பாஜகவிலே அவரை யாரும் கண்டுகொள்வதில்லை என்பதால் இதுபோன்று பேசி வருகிறார். 

திமுகவை பாசிச அரசு என எடப்பாடி பழனிச்சமி விமர்சிக்கிறார். யாரையும் அண்ட விடாமல் விரட்டி அடிப்பதுதான் பாசிசம், அந்த இயக்கத்திலிருந்து பிரிந்து செல்பவர்கள் கூட மீண்டும் கட்சியில்  இணைத்துக்கொள்ளுங்கள் என கேட்டும் யாரையும் அண்ட விடாமல் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் பாசிஸ்ட். இந்தியா முழுமவதும் சாதி மத மோதல்களை கிறித்தவர்கள் மீதான மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில் அத்தகைய மோதல்களை தமிழ்நாட்டில் நடைபெறாதவாறு முதலமைச்சர் இரும்புக்கரம் கொண்டு அடக்கியுள்ளார்.  குந்தம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு பேருந்து நிலையம் ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும்” என்றார்.

Trending News

Latest News

You May Like