1. Home
  2. தமிழ்நாடு

உயில் எழுதி வைத்தார் டெலிகிராம் சி.இ.ஓ.,

Q

டெலிகிராம் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், 40, தனக்கு பிறந்த குழந்தைகளுக்கு சொத்துகளை பிரித்து கொடுத்துள்ளார். இது குறித்து பிரெஞ்சு மொழி நாளிதழுக்கு பவெல் துரோவ் அளித்த பேட்டி: எனது குழந்தைகளுக்கு இடையே நான் எந்தவிதமான வித்யாசத்தையும் பார்ப்பதில்லை. இயற்கையான முறையில் கருத்தரித்தவர்கள், எனது விந்தணு தானத்தால் பிறந்தவர்கள் என எல்லோரும் எனக்கு ஒன்றுதான்

எல்லோருக்கும் சமமான உரிமை உண்டு என நினைக்கிறேன். தனக்குப் பிறந்த 100 குழந்தைகளுக்கு, தன் சொத்துக்களை பிரித்து கொடுத்துள்ளேன். நான் சமீபத்தில் எனது உயிலை எழுதினேன். இன்று முதல் முப்பது ஆண்டுகள் முடியும் வரை என் குழந்தைகள் அந்த சொத்துகளை அணுக முடியாது. அதன் பிறகு சொத்துக்கள் அவரது பெயரில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

மூன்று மனைவிகளுக்கு ஆறு குழந்தைகளின் அதிகாரப்பூர்வ தந்தை தான் துரோவ். மீதமுள்ள குழந்தைகள் இவரது விந்தணு தானத்தில் பிறந்துள்ளது. இவர் சில ஆண்டுகளாக விந்தணு தானம் செய்து வருகிறார். ப்ளூம்பெர்க் கணக்கு படி இவரது சொத்து மதிப்பு 13.9 பில்லியன் டாலர் ஆகும்.

டெலிகிராம் பயன்பாட்டில் செய்யப்படும் அனைத்து குற்றங்களுக்கும் துரோவ் உடந்தையாக இருந்ததாக கூறி பிரெஞ்சு அதிகாரிகளால் கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டார். அவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like