ரீலிஸ் மோகத்தால் தந்தை கண் முன்னே பரிதாபமாக பலியான இளைஞர்!
தெலங்கானாவை சேர்ந்தவர் கங்காராம். இவரது மகன் சிவராஜுலு (வயது 23). கங்காராம் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சிவராஜூலுவும் தனது தந்தையிடம் பாம்பு கையாளுதலைக் கற்றுக்கொண்டார். இந்நிலையில் தந்தை கங்காராம் நாகப்பாம்பை மகனிடம் கொடுத்து ரீல்களை எடுக்கச் சொன்னார்.
அதன்படி, சிவராஜூலு பாம்புடன் வாயில் முத்தம் கொடுத்து போஸ் கொடுத்தார். அப்போது, அவரது நாக்கை பாம்பு கடித்துள்ளது. இதை உணராமல் சிவராஜூலு வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். சில நிமிடங்களில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். சிவராஜூலுவை பாம்பு கடித்ததை உணர்ந்த அவரது தந்தை உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரீல் மோகத்தால் தந்தை கண்முன்னே இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.